சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் தமிழக பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்றது.
Independent Labour Union ( ILU ) NewDelhi தேசிய துணை தலைவர் திரு சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில், மாநில பொது செயலாளர் செல்லதுரை மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளருமான சரசுராம் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், தேசீய SC/ ST / OBC/ Minority தொழிலாளர் தொழிற் சங்கங்களை தேசீய கவுன்சிலில் இணைப்பு குறித்த ஆரோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஜீன்-2 நாக்பூரில் நடைபெற உள்ள தேசீய SC/ ST/ OBC தொழிற் சங்க கவுன்சுல் கூட்டத்தில் 2000 நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் குறித்தும். தமிழகம் முழுவதும் செயல்படும் அனைத்து பொதுதுறை, தனியார் துறைகள் தொழிற் சங்கங்களை ஒருங்கிணைப்புது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அரசின் தேசிய கவுன்சில் கூட்டமைப்பில் 12 வது கவுன்சில் உறுப்பினராக சேர 5 லட்சம் உறுப்பினர் சேர்க்கையில் 4.5 லட்சம் நிறைவு பெற்றுள்ளதாகவும், 97% உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களை இந்திய முழவதும் ஒருங்கிணைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அம்பேத்கர் கட்டுமான தொழிலாளர் நல சங்கம், முருகேசன், வெங்கடேசன், மின் வாரிய SC/ ST ஊழியர்கள் தல சங்கம், பாஸ்கர், சம்பத், அருள், செல்லதுரை, சக்திவேல், SRCL SC/ ST ஊழியர்கள் நல சங்கம், கண்ணன். தங்கம்
தலேமா தொழிற் சங்கம், முரளி, சிவா, தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும் சுந்தரம், மாரி, தமிழ்நாடு மேக்னசைட் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 coment rios: