சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வழக்கறிஞர்கள் சங்கத்தில் தெரிவிக்காமல், வழக்கறிஞர்கள் தரப்பு நியாயத்தை நேரடியாக கேட்காமல் வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது..... சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் கோரிக்கை....
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்த சங்கத்தின் தலைவராக வழக்கறிஞர் ஜெ.மு . இமயவரம்பன், செயலாளராக வழக்கறிஞர் முருகன் மற்றும் பொருளாளராக வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவராக வழக்கறிஞர் சரவணன், துணை செயலாளர்களாக ஜோதி, முருகன், நூலகராக வழக்கறிஞர் மணிவண்ணன், செயற்குழு உறுப்பினர்களாக வழக்கறிஞர்கள் சிராஜுதீன், ஜனா, கவிதா மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் இன்று சேலம் மாநகர காவல் ஆனையாளரை திருமதி விஜயகுமாரி அவர்களை சந்தித்தனர். மேலும் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் ஆணையாளர் அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றனர்.
தொடர்ந்து, வழக்கறிஞர் சங்கத்தில் தகவல் தெரிவிக்காமல் , வழக்கறிஞர்கள் தரப்பு நியாயத்தை நேரடியாக கேட்காமல் வழக்கறிஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்ற கோரிக்கை முன்வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி விஜயகுமாரி அவர்கள் வழக்கறிஞர்களின் கோரிக்கை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
0 coment rios: