பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதானமாக உள்ளது நெசவுத் தொழிலாகும். இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், தமிழக அரசு விலையில்லா வேட்டி சேலை, பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை போன்ற திட்டங்களை 228 விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 67,000 விசைத்தறிகள் மூலமாக அமுல்படுத்தி பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.
இந்தத் திட்டமானது ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கி டிசம்பர் மாதத்தில் நிறைவு பெற்று தைப்பொங்கல் தினத்தன்று பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், உக்கரைன் போர் மற்றும் உலக பொருளதார பிரச்சனை காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இலவச வேட்டி சேலை இலவச சீருடை திட்டத்தை துவங்கிட அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 coment rios: