செவ்வாய், 7 மே, 2024

தலேமா நிறுவனத்தின் பல கோடி முறைகேடு... பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.....அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் நிறுவனத்தின் GM மற்றும் HR ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுபவர்கள் என எச்சரிக்கை....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் தலேமா நிறுவனத்தில் பல கோடி  ஊழல் : சட்டத்திற்கு புறம்பான லே-ஆப் - 
100க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் தலேமா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
தலேமா மின்னனு ( இந்தியா) பிரவேட் லிமிடேட் நிறுவன தொழிலாளர்கள் பாதுகாப்பு  தொழிற்சங்கம், நாம் தமிழர் தொழிற்சங்கம் மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக சேலம் மூன்று ரோடு பகுதியில் செயல்பட்டு வரும்  அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
தமிழ்நாடு தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளரும், கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சரசுராம் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தினை இணைந்து நடத்திய தலேமா மின்னணு தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர்  சி. தங்கம் உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்  தொழிலாளர்களின் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக தலேமா கம்பெனி நிர்வாக சீர்க்கேட்டை வன்மையாக கன்டிபது, தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிரான லே ஆப்  ( Lay Off )  நடை முறையை கண்டிப்பது, சேலம் மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் அவர்களின் பாரபட்சமான Lay Off பரிந்துரையை வன்மையாக கண்டிப்பது எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் தலேமா நிர்வாகத்தின் முதற் கட்ட  சட்டபூர்வமட்ட Lay Off  முறையை ரத்து செய்து தொழிலாளர்களின் ஊதிய பிடிப்பை திரும்ப கொடுக்க வேண்டும், இதற்கிடையில் தொழிற் சங்க நிர்வாகிகளை கலந்து பேசாமல்  இரண்டாம் கட்ட சட்டபூர்வமற்ற Lay Off அறிவிப்பை ரத்து  செய்ய வேண்டும், போலி ஆவணங்களை கொடுத்து Lay Off அறிவிப்பு செய்த நிர்வாகத்தை கண்டிப்பது, தொழிற் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய வருடாந்திர நிதி உதவிகளை 20: ஆண்டுகளாக அளிக்காமல் பல லட்சம் ஊழல் செய்த நிர்வாக அதிகாரிகள் மீது  விஜிலென்ஸ்  விசாரணைக்கு உத்தரவு வழங்கிட தமிழக அரசு  தலைமை தொழிலாளர்  ஆணையத்தை வலியுறுத்துவது, தலேமா நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகள்  பொது மக்கள்_சமூக  நல உதவி திட்ட நிதி Corporate Social Responsible Funds ( CSR Funds )  பல கோடி மோசடி குறித்து  விஜிலென்ஸ்  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தொழிலாளர் மருத்துவ காப்பீடு ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும், PF, Gratuity, ESI மற்றும்  தொழிலாளர் சீருடை , சீருடை தூய்மை படி,  காலணி, குடை, மழை கோட்டு நிதி பல லட்சம் ஊழல் குறித்து விசாரணை அறிக்கை அளிக்க தொழிலாளர் ஆணையர் - சென்னை அவர்களை வலியுறுத்துவது மற்றும் தொழிலாளர் நல சட்டத்தை சட்டவிரோதமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் தலைமான் நிறுவனத்தின் பொது மேலாளர் ஸ்டீபன் மற்றும் HR. வின்சென்ட் ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் முழக்கங்களாக எழுப்பப்பட்டன.
தொடர்ந்து தொழிலாளர்களின் நலனுக்கு எதிராகவும், அரசு விதிமுறைகளையும் மீறியும் தன்னிச்சையாக செயல்படுவதோடு அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் தலைமா அதிகாரிகள் இருவர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விற்கப்பட்டது.
ந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  தொழிற்சங்க நிர்வாகிகள்l 
அருள், கண்ணன்
பாஸ்கர் தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: