சனி, 22 ஜூன், 2024

2026ல் ஆட்சி மாற்றத்தை மக்கள் தருவார்கள்: தமாகா யுவராஜா

ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் மத்திய மாவட்டம் சார்பில், மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜாவின் 43வது பிறந்தநாளை முன்னிட்டு, எஸ்.சி.செங்கோட்டு வேலப்பன் நினைவு சேவை மருத்துவமனை, வேளாளர் கல்வி அறக்கட்டளை, அரசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து ஈரோடு மரப்பாலம் சிஎஸ்ஐ மருத்துவமனையில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமை துவக்கி வைத்த பின்னர் யுவராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் அவர் பேசியதாவது, கள்ளக்குறிச்சியில் 55க்கும் மேற்பட்டோர் விஷ சாராயம் அருந்தி இறந்துள்ளனர். இதற்கு காவல்துறை தோல்வியே காரணமாகும். காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் பல்வேறு பொய் காரணங்களையும், மோடி சர்வாதிகாரி என பிரசாரம் செய்தும் வெற்றி பெற்றது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு முதலமைச்சர் வந்து விடை அளிக்கிறார். ஏன் எதிர் கட்சிகள் பேச அனுமதிப்பதில்லை. எதிர் கட்சிகள் பேச்சை ஒளிபரப்பினால் கூடாது என்று பத்திரிகையாளர்களை சபாநாயகர் எச்சரிக்கிறார்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவது என்ன என்று கூட மக்களுக்கு காட்டுவதில்லை. இது என்ன ஜனநாயகம். உண்மையில் ஸ்டாலின் தான் பெரிய சர்வாதிகாரி. இந்நிலைமை தொடராது. மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். 2026ல் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் தருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், மத்திய மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் சிவானந்தம், மாயா, சக்தி, மற்றும் சஞ்சய் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், நடைபெற்ற முகாமில் சுமார் 300 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: