சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
செட்டி சாவடி ஊராட்சியில் புதிய குடிநீர் திட்டம் தொடக்கம். 50 ஆண்டுகள் கனவு திட்டம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி...
செட்டிச்சாவடி ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனை அடுத்து அங்குள்ள டால்மியா பகுதியில் இருந்து குடிநீர் எடுக்க அனுமதி கேட்டு பஞ்சாயத்து தலைவர் அம்பிகா கார்த்திக் சேலம் மேற்கு ஒன்றிய A.V. ராஜு மற்றும் ஊர் நிர்வாகிகள் டால்மியா அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு டால்மியா அதிகாரிகள் அனுமதி அளித்ததை எடுத்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் செட்டி சாவடி பஞ்சாயத்து தலைவர் அம்பிகா கார்த்திக் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் A.V. ராஜு முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், சிட்டிசாவடி ஊராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகள், ஒன்பது கிராம மக்கள் என 6000க்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வகையில் 50 ஆண்டு கால கனவு திட்டத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இந்த திட்டம் கொண்டு வர காரணமாக இருந்த அனைவருக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்த விழாவில் டால்மியா நிறுவன மேலாளர் காளிதாஸ், துணை மேலாளர் அருண், ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பிரவீன் குமார், ஒன்றிய துணை செயலாளர் பவித்ரா முனியப்பன், ஊர் தர்மகர்த்தா ஏழுமலை, செட்டி சாவடி ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் சுரேஷ், முனியப்பன், வசந்தம் பழனிச்சாமி, குழந்தை, பாலமுருகன், பாஸ்கரன், சுந்தர், முனியப்பன், ஈஸ்வரன், அய்யனார், சரவணன் மற்றும் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: