சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஸ்ரீ பாலா தேவஸ்தான, ஸ்ரீ மகா பெரியவா இல்லம் மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பக்த ஜன சபா சார்பில் உலக சேமத்தை முன்னிட்டு ஸ்ரீ ருத்ர ஏகாதசனி மற்றும் ஸ்ரீ தன்வந்திரி மகா யாகம் சேலத்தில் நடைபெற்றது.
இந்த அமைப்பின் சார்பில் உலக நன்மையை வலியுறுத்தி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட வரும் இந்த மகா யாகம் சேலம் ஜான்சன் நகர் பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் மேல் தடத்தில் உள்ள கூட்டாரங்கள் நடைபெற்றது.
மகா யாகத்தை இணைந்து நடத்திய அமைப்புகளில் முக்கிய நிர்வாகிகள் ராஜா சுப்புராஜ் குமார் மற்றும் ராமையர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த மகா யாகத்தில் குருநாதர்கள் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி சுவாமிகள் மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ லட்சுமி நாராயண சித்தர் வழிகாட்டுதல்படி உலக சேமத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த மகா யாகத்தில் காலை 7:00 மணிக்கு ஸ்ரீ கணபதி பூஜை ஸ்ரீ ருத்ர பாராயணம் ஸ்ரீ 108 வானலிங்கம் மரகதலிங்கம் ஸ்படிகலிங்கம் நவபாஷாண லிங்கம் சிங்கம் 16 முகம் கொண்ட பிரம்ம லிங்கம் ஆகிய லிங்க மூர்த்தி களுக்கு 11 வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதனை அடுத்து காலை 10 மணியளவில் ஸ்ரீ ருத்ர ஹோமம் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் ஆகியவை நடைபெற்றன தொடர்ந்து 11 மணி அளவில் ஆராதனை மற்றும் மகா தீபாராதனை தொடர்ந்து அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த ஸ்ரீ ருத்ர ஏகாதசி மற்றும் ஸ்ரீ தன்வந்திரி மகாயாகத்தில் சின்ன திருப்பதி அஸ்தம்பட்டி ஜான்சன் நகர் உள்ளிட்ட சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
0 coment rios: