ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மூர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கி வைத்திருத்தல் தொடர்பாக 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தாளவாடி, பர்கூர், கடம்பூர் போன்ற கர்நாடக மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை மூலமாக ரேஷன் அரிசி கடத்திய 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அதில், சம்பந்தப்பட்ட 156 குற்றவாளிகள் கைது செய்தும், அவர்களிடம் இருந்து 32¼ டன் ரேஷன் அரிசி, 13 கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 52 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 88 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.17 லட்சத்து 6 ஆயிரத்து 301 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: