தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், பெரியார் நகரில் உள்ள அமைச்சர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை , மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, தேர்தல் விதிமுறைகள் காரணமாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு கலைஞரின் பிறந்த நாளை கொண்டாடி வருவதாகவும், வரும் 6ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.
மேலும், நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையில் ஈரோடு தொகுதியை பொறுத்தவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாம் என்றும் தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறிய அவர், மத்தியிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று, திமுக தலைவரின் ஆலோசனைப்படி பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகளை பொறுத்தவரை, இதற்கு முன்பு ஊடகங்கள் வெளியிட்டு தகவல் தழைகீழாக மாறியிருந்தை போல தற்போதைய தேர்தலிலும் கருத்துக்கணிப்புகள் மாறும் என்றும், குறிப்பாக 500 பேரிடம் மட்டுமே எடுக்கப்படும் கருத்துக்கணிப்புகள் சரியான முடிவாக இருக்காது என தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதை நாங்கள் முடிவு செய்து விட்ட ஒன்று என்றும், திமுக தலைவர் தேர்தல் நேரங்களில் மட்டுமல்லாமல் மற்றும் அனைத்து நேரங்களிலும் மக்களின் தேவையை புரிந்து சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
பாஜகவின் தொந்தரவு என்பது எப்போதும் உள்ளதால் தான் தற்போது திமுக நன்றாக வளர்ந்துள்ளது என தெரிவித்தார். நடிகர் பிரகாஷ்ராஜ் 69 சதவீத இடஒதுக்கீடு குறித்து தெரிவித்த கருத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, அன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் இணைந்து செயல்பட்டு 69 சதவீத இடஒதுக்கீட்டை நிலைநிறுத்த வேண்டும் என்றே கலைஞர் கூறியதாகவும், அதனை அரசியலாக்குவது சரியாக இருக்காது என தெரிவித்தார்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவாவின் தலைவர் என குறிப்பிட்டு பேசியதற்கு அதிமுகவினரே பதிலளித்து விட்டதாகவும், இதுகுறித்து கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை என்றார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அரசு மதுக்கடைகளில் நடைபெறும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை குளறுபடிகள் குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியவில்லை என்றும் வரும் 6ம் தேதிக்கு பிறகு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
0 coment rios: