ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 2 மணி நிலவரப்படி திமுக 68,639 வாக்குகள் அதிமுகவை விட அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளது.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூன்.4) இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தொகுதியில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் 68,639 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் 1,68,360 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 99,721 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் 26,850 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாகா வேட்பாளர் விஜயகுமார் 23,317 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இதன் மூலம் , திமுக வேட்பாளர் பிரகாஷ் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான ஆற்றல் அசோக்குமாரை விட 68,639 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
0 coment rios: