செவ்வாய், 4 ஜூன், 2024

கஜ நாதனின் பூரண அருளாசி செல்வகணபதிக்கு கிட்டியது.


சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில்  கஜமுகனின் பூரண அருள் ஆசி T.M. செல்வகணபதிக்கு கிட்டியது.

சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விக்னேஷ் மற்றும் திமுக வேட்பாளர் செல்வகணபதி ஆகியோருக்கு ஸ்ரீ ராஜகணபதியின் அருளாசி  யாருக்கு....... வருகின்ற ஜூன் 4 அன்று விடை தெரியும் என கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி சபா நியூஸ் தமிழ் தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்நோக்கி வருகிறது.
 இதன் ஒரு பகுதியாக சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி பிருந்தா தேவியிடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் இருவருக்குள்ளேயும் ஒரு தொடர்பு உள்ளது.
கஜமுகன் ஒருவரின்  இயற்பெயர்களை கொண்டவர்களே அந்த இருவரும்.
திமுக சார்பில் போட்டியிடும் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெயர் செல்வகணபதி மற்றொருவர் அதிமுக சார்பில் போட்டியிடும் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விக்னேஷ். ஆக இருவரும் முழு முதற்  கடவுளின் பெயர்களை கொண்டவர்கள் என்பதே இவர்கள் அதாவது இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் உள்ள ஒற்றுமை.
தமிழ் கடவுள் ஆன முருகப்பெருமானின் சகோதரரின் இயற்பெயர்களை கொண்ட இந்த இரண்டு வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து முனைப்புடன் செயல்பட்டாலும் இந்த இருவரில் அதாவது டி எம் செல்வகணபதி மற்றும் பி விக்னேஷ் ஆகிய இருவரில் யாருக்கு அருள் செய்யப் போகிறார் என்பதனை வருகின்ற ஜூன் 4ல் தான் தெரியவரும்.
சேலம் ஸ்ரீ ராஜகணபதியின் அருளாசி யாருக்கு கிட்ட போகிறது என்பதனை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம் என என சபா நியூஸ் தமிழ் தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். 
அதன்படி வாக்கு எண்ணிக்கை நேற்று சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கியது. 
சேலம் மக்களவைத் தொகுதி

வெற்றி நிலவரம் -  அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டி.எம்.செல்வகணபதி (திமுக) – 5,66,085
ப.விக்னேஷ் (அதிமுக ) – 4,95,728
என். அண்ணாதுரை (பாமக) – 1,27,139
டாக்டர் மனோஜ்குமார் (நாம் தமிழர் ) – 76,207

வாக்குகள் வித்தியாசம் – 70,357

திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 70,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சேலம் மக்களவைத் தொகுதியை மீண்டும் தன் வசமாகியது திமுக. 

இதே போல தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கட்சியினர் கைப்பற்றினர் என்பதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சேலம் உட்பட 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சேலம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அண்ணாதுரை தனது டெபாசிட்டை இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சபா நியூஸ் தமிழ் டிஜிட்டல் செய்திகளுக்காக சேலம் செய்தியாளர் எஸ் கே சுரேஷ் பாபு

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: