புதன், 26 ஜூன், 2024

ஆல் இந்தியா பார் கவுன்சில் முயற்சியை ஏற்று மத்திய அரசு முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும்... தவறும் பட்சத்தில் பல கட்ட போராட்டங்களை சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் முன்னெடுக்கும்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

ஏற்கனவே அறிவித்திருந்த போராட்டத்தை கைவிட்டு நீதிமன்ற பணிகளுக்கு திரும்பிய சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர்.
இந்திய அரசு கொண்டுவந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் சில மாற்றங்கள் செய்து இந்தி திணிப்பையும் மேற்கொண்டுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மற்றும்  உறுப்பினர்கள் அனைவரும் நீதிமன்ற பணிகளில் இருந்து இன்று விலகிக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு ஆல் இந்தியா பார் கவுன்சில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்திய அரசு கொண்டுவந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்தங்களை திரும்பப் பெறுவதற்கு உண்டான முன் முயற்சியை ஆல் இந்தியா பார் கவுன்சில் முன்னெடுக்கும் என்ற என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில்,
 சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் அந்த சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் இமயவரம்பன் தலைமையில் நடைபெற்றது.  கட்டிடத்தில் கூடிய இந்த அவசர பொதுக்குழு கூட்டத்தில், 26-6-24 ம் தேதி All india bar council அனுப்பியுள்ள சுற்றறிக்கையை ஏற்று இன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த போராட்டத்தை கை விட அனைவரும் ஏக மணதாக முடிவு தெரிவித்ததால். சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் நீதிமன்ற பணிகளுக்கு இன்று 27-6-24 செல்லலாம் என முடிவு செய்யப்பட்டு, சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்த போராட்டத்தினை கைவிட்டு இன்று பணிக்கு திரும்பினார்.
 இது குறித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் இமயவரம்பன் கூறுகையில், ஆல் இந்தியா பார் கவுன்சில் அளித்துள்ள உத்தரவாதத்தை தாங்கள் நம்புவதாகவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் மேற்கொண்டுள்ள சட்டை திருத்தங்களை வாபஸ் வராவிட்டால், அடுத்த கட்ட போராட்டங்களை மிகத் தீவிரமாக முன்னெடுக்கும் என்றும் அச்சங்கத்தின் தலைவர் இமயவரம்பன் தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: