S.K. சுரேஷ்பாபு.
10-கும் மேற்பட்ட சட்ட திருத்தங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் அவசியமே...மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்ட திருத்தங்களுக்கு முழுமையான வரவேற்பு தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு பிரத்தியேக பேட்டி.
முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தங்கள் கொண்டு வந்துள்ள மத்திய அரசு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அதனை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக உட்பட நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நீதிமன்றங்களை புறக்கணித்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வழக்கறிஞர்களின் இந்த போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வழக்கு தொடர்பாக எந்த விதமான முன்னேற்றமும் இல்லையே என்ற பாதிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மனிதன் அம்மிககு பதில் மிக்சிக்கு மாறுவதும்...ஆட்டுகல்லுக்கு பதில் கிரைன்டருக்கு மாறியதும்...தட்டச்சுக்கு மாற்றாக கம்புட்டருக்கு மாறுவதும் எப்படி ஏதுவோ...அதுபோல் சிறுவர், சிறுமியர் , பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை..வழக்கு விரைந்து முடிக்க கால கெடு...சாட்சியங்கள் கனணிமயம். என திருத்தி அமைக்கப்பட்டுள்ள 10 கும் மேற்பட்ட மாற்றங்கள் அவசியமே, என்றும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்ட திருத்தங்களில் மொழிமாற்றம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தமிழ்நாடு கூற்று நடவடிக்கையை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி தெரிவித்துள்ளார்.
காரணம்..
இந்த சட்டத்தை புரிதல் இல்லாமலேயே சில அமைப்புகள் கண்டிப்பதும், அந்த சட்ட திட்டத்தை அமல்படுத்த கூடாது என கூறுவதும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு வன்மையாக கண்டிக்கிறது என்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார் சரசுராம் ரவி.
காரணம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்ட திருத்தங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை மொழி மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது, உள்ளபடி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அந்த சட்ட திருத்தத்தில் பொதுமக்களுக்கு பயன் உள்ள வகையில் 100% கொண்டு வந்துள்ளனர் என்றும் இது இந்திய மக்களுக்கு பாதுகாப்பான சட்டமாக இருக்கிறது என்றும் உதாரணமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.
மேலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு இந்தியாவில் எந்த ஒரு மருத்துவமனையிலும் முற்றிலுமாக இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என கொண்டுவரப்பட்டுள்ளது மீறி செயல்படும் மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், மேலும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அதாவது 30 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பத்துக்கு மேற்பட்ட சட்டை திருத்தம் வரவேற்கப்படுவதாகவும் இதற்காக போராடும் வழக்கறிகளுக்கு வேலை பளு அதிகரிக்கிறது என்று கூறலாம் என்று தெரிவித்த தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி, தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் போராடுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் வழக்கறிஞர்கள் ஏன் இதை தொடர்ந்து எதிர்க்கின்றனர் என தெரியவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்ட திருத்தம் குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக எந்தவித நியாயமும் இல்லை என குறிப்பிட்ட அவர், சட்ட திருத்தம் தொடர்பாக பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்றும் முழுக்க முழுக்க நாடு முழுவதும் உள்ள கோடான கோடி மக்களுக்கு நன்மையை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். வழக்கறிஞர்கள் தொடரப்பட்டுள்ள இந்த உச்சநீதிமன்ற வழக்கு நியாயம் இல்லை என்றும் பொதுமக்களுக்கு ஏதுவாக கொண்டு வரப்பட்டுள்ளது என்று மட்டும் நிதர்சனமான உண்மை என்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
0 coment rios: