S.K. சுரேஷ்பாபு.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர்களால் வெற்றி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள கட்சித் தலைவர்கள் கண்டனங்களை இதனை அடுத்து சேலத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் சார்பில் மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் நான்கு ரோடு கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதிலும் நடைபெற்று வரும் படுகொலைகளை கண்டித்தும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் அனைத்து அமைப்பின் நிர்வாகிகளும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் இமயவரம்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் காஜாமைதீன், ஆதித்தமிழர் பேரவை சந்திரன், தமிழக நாயுடு பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன், திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட செயலாளர் டேவிட், சாதிய அற்றோர் பேரவை பொன் சரவணன், மக்கள் தேசம் கட்சி மாநில செயலாளர் சுலைமான்,மாவட்ட செயலாளர் பிரேம்குமார், தமிழ் புலிகள் கட்சி உதய பிரகாஷ், திராவிட தமிழர் கட்சி மாவட்ட தலைவர் இளங்கோவன், இந்திய குடியரசு கட்சி வடிவேல் முருகன்,உதய சூரியன், கோ.சீனிவாசன் அம்பேத்கார் மக்கள் இயக்கம் சேலம் மாவட்ட தலைவர் அம்பேத்கார், மாவட்ட செயலாளர் சித்தையன், மாவட்ட பொருளாளர் ரமேஷ் உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்.
0 coment rios: