சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக முற்பட நாடு முழுவதும் சாதிய படுகொலைகள் இணையும் நடைபெறக் கூடாது... சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மத்திய அரசுக்கு எச்சரிக்கை...
நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன ஒரு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆதி தமிழர் பேரவையின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.டி.ஆர்.சந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் வீர வேந்தன், மாநில தொழிலாளர் அணி துணை செயலாளர் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் சையது மூஸா, திராவிடர் கழக மாவட்ட தலைவர் இளவழகன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தங்கராசு, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக் முகமது, மதிமுக மாநகர செயலாளர் அருள்மாது, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அமிர்தராஜ் மற்றும் திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட ஒரு முன்னிலை வாங்கித் தந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக உட்பட நாடு முழுவதும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் கோவிலாங்குளம் அழகேந்திரன் ஆணவ படுகொலை சம்பவத்தை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஆதித்தமிழர் பேரவையின் மாநில இளைஞரணி செயலாளர் சேலம் மத்திய மாவட்ட செயலாளருமான ஏ.டி.ஆர்.சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கல்லூரி மாணவ மாணவிகளின் மருத்துவ துறையின் எதிர்கால கனவை சீர்குலைத்து வரும் நீட் தேர்வு முறையை தமிழகம் உட்பட நாடு முழுவதும் ரத்து செய்யாத மத்திய அரசை கண்டிவதாக கூறியவர், இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு முறையை தற்போது வரை எடுக்காமல் இருப்பது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்ட அவர், சமீபகாலமாக இந்தியா உட்பட தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சாதிய ஆணவ படுகொலைகள் இனியும் நடைபெறக்கூடாது என்றும் இதற்கு காரணமானவர்களை இரும்பு கரம் கொண்டு மத்திய மாநில அரசுகள் கைது செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் உட்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: