S.K. சுரேஷ்பாபு.
ஒரு மாத கால போராட்டங்களுக்கு பிறகு SDCBA வழக்கறிஞர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப முடிவு...நீதிமன்றத்திற்கு சென்று கொண்டே போராட்டத்தை வேறு வழியில் முன்னெடுப்போம் என SDCBA தலைவர் அறிக்கை வெளியீடு...
முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி நீதீமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், விமாண நிலைய தர்ணா, ஜந்தர் மந்தர் போராட்டம் நடத்தியும் தமிழகத்தில் இருந்து பாரளுமன்றத்தில் அண்ணன் எழுச்சித்தமிழர் மட்டுமே குரல் கொடுத்தார், மத்திய சட்ட அமைச்சரை நமது federation தலைவர் அண்ணார் திரு.மாரப்பன் அவர்கள் நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார். நமது சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் பணியை மூத்த வழக்கறிஞர் திரு.பிரசாந்த் பூசனிடம் ஒப்படைத்துள்ளது.
நம்முன் தற்போது 1. நாளையில் இருந்தே நீதிமன்றம் செல்லலாம் அல்லது 2.கால வரையற்ற வேலை நிறுத்தம் என்கிற இரண்டே தீர்வு உள்ளதால் நமது சங்க வழக்கறிஞர்களின் நலன் கருதி நாளை 1-8-24 ம் தேதி முதல் நமது சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் நீதிமன்றம் செல்லலாம் என முடிவெடுத்துள்ளோம். நீதிமன்றத்திற்கு சென்று கொண்டே போராட்டத்தை வேறு வழியில் முன்னெடுப்போம் என SDCBA தலைவர் ஜெ.மு. இமயவரம்பன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
0 coment rios: