S.K. சுரேஷ்பாபு.
பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ரோட்டரி சங்க ஒருங்கிணைப்புடன் நடைபெற்று வரும் தடகள விளையாட்டு போட்டிகள்... தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மாணாக்கர்கள் உற்சாகம்.
சேலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் சேலம் ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் பங்களிப்புடன் 2024-2025 கல்வி ஆண்டிற்கான வாழப்பாடி மைய கல்வி குறுவட்ட அளவிலான குழு மற்றும் தடகள போட்டிகள் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து 70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு உள்ள இந்த குறுமைய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர், 400 மீட்டர், குண்டு எறிதல், வட்டி எறிதல், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு உடனுக்குடன் பதக்கங்களும் பரிசு பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த மாணாக்கர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த முதற்கட்ட போட்டியில், வெற்றி பெறும் மானா கர்கள் அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டிகளிலும் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று சேலம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் ரோட்டரி சங்க சேலம் மாவட்ட ஆளுநர் சிவகுமார், முன்னாள் மாவட்ட ஆளுநர் வேலாயுத ரவீந்திரன், மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார் மற்றொரு செந்தில்குமார் ஈஸ்வர குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: