தேர்தல் வாக்குறுதிப்படி மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரப் படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஈரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது.
பிரிவிற்கு இரண்டு பேரை கள உதவியாளராக ஒப்பந்ததாரர் மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு வாரியமே ஊழியர்களை நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். அரசு உத்தரவிற்கு எதிராக நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த தொழிலாளர் முறையில் புகுத்தக்கூடாது. பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.
அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், பொதுக் கட்டுமான வட்டங்களில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற தர்ணாவிற்கு கிளை தலைவர் எம்.ஆர்.பெரியசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். மண்டல செயலாளர் சி.ஜோதிமணி மற்றும் பலர் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: