சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்டம் முழுவதிலும் உள்ள 385 ஊராட்சி செயலாளர்களை கடை நிலை ஊழியர்களாக பாவித்து தங்களை அரசு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையினை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் முதற்கட்ட போராட்டம் நடைபெற்றது.
அந்த சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்து ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தங்களுக்கு ஏற்கனவே உள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷமிட்ட அவர்கள் தங்களது முக்கிய கோரிக்கையான ஒற்றை கோரிக்கை அதாவது ஊராட்சி செயலாளர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவசங்கர் நம்மிடையே கூறுகையில், முதற்கட்டமாக சேலம் கோட்டை மைதானத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறோம் என்றும் தமிழக அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை எனில் செப்டம்பர் 27ஆம் தேதி மாநில அளவிலான பெருந்திரள் முறையீட்டு இயக்க போராட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை முன்பாக நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: