இதுதொடர் பாக ஈரோட்டில் 'தி இன்டஸ்ட்ரி யல் பேப்பர் கோன்ஸ் அண்டு டியூப்ஸ் மேனுபேக்சர்ஸ் அசோசியேசன்' எனப்படும் பேப்பர் கோன் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் சங்கரநாராயணன் வரவேற்றார். கூட்டத்தில் பேப்பர் கோன் மற்றும் டியூப்ஸ் விலையை 15 சதவீதம் உயர்த்து வது என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் குப்புசாமி கூறும்போது, 'ஈரோடு, நாமக்கல், சேலம், ராஜபாளையம், கோவை, தாராபுரம் பகுதிகளில் மொத்தம் 170 பேப்பர் கோன் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இங்கு தினசரி 15 லட்சம் கோன்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது 'பேப்பர் கோன்' செய்வதற்கான 'கிராப்ட்' காகிதத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் 3 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணமும் பல மடங்கு உயர்ந் துள்ளதால், கோன் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர்களின் வாழ்வாதாரத்துக்காக 'பேப்பர் கோன் மற்றும் பேப்பர் டியூப்' விலையை 15 சதவீதம் மட் டும் உயர்த்த வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாகி உள்ளோம்' என் றார். முடிவில் பொருளாளர் திரு ஞானம் நன்றி கூறினார்.
0 coment rios: