சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி மக்களின் தேவைகள் அனைத்தும் சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் வாயிலாக நிவர்த்தி செய்து தரப்படும். சேலம் தளவாய்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சேலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜா பேச்சு.
காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவாய்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு சேலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சேலம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் பெருந்தலைவர் திருமதி பூங்கொடி ராஜா உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். தொடர் நடைபெற்ற கூட்டத்தில் தளவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்து பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தொடர் நடைபெற்ற கூட்டத்தில் தளவாய்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு பிரச்சனைகள் குறித்து கோரிக்கைகளை முன் வைத்தனர்.
குறிப்பாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் தார் சாலை மேல்நிலை நீர் தேக்கு தொட்டி அமைப்பது உள்ளிட்ட பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் சேலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்று சேலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜா தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் 2024 2025 ஆண்டிற்கான பல்வேறு திட்ட பணிகள் சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணிகள் அனைத்தும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கப்படும் என்று தெரிவித்த அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதனை நிவர்த்தி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதாக பெருமையிடம் தெரிவித்த ராஜா, ஒவ்வொரு கூட்டத்திலும் சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குறை என்பதே சொல்ல முடியாத அளவிற்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் சாமுண்டீஸ்வரி செல்வம் ஊராட்சி செயலாளர் சின்னத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: