சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்கிய விவகாரம்.. தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தமிழக அரசு தற்போது வரை தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும். சேலத்தில் நடைபெற்ற உள் ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கத்தில் தலைவர்கள் கருத்து.
தமிழகத்தில் வசித்து வரும் அருந்ததிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசின் சமீபத்தில் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாள்தோறும் கண்டன போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்ற வனமே உள்ளன. இந்த நிலையில் அறிவு சமூகம் என்ற அமைப்பின் சார்பில் உள் ஒதுக்கீட்டில் ஒளிந்திருக்கும் சமூக அநீதி என்ற பெயரில் உள் ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கம் சேலம் அன்னதானபட்டியில் நடைபெற்றது. மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி, புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, அறிவு சார் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், மத்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் ராம்ஜி உள்ளிட்ட ஒரு முன்னிலை வகித்த இந்த கருத்தரங்கில் அருந்ததிய மக்களுக்கான வழங்கப்பட்ட உள்ள இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு கருத்துகளை முன் வைத்தனர். குறிப்பாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இந்த உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தமிழகம் தழுவிய அளவில் நாள்தோறும் பல்வேறு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையின் கூட தமிழக அரசு இதுவரை போராட்டங்கள் குறித்து எந்தவிதமான கருத்தும் தற்பொழுது வரை தெரிவிக்காத நிலையில் உள்ளது தங்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது என்றும், தமிழக அரசின் இந்த விரோத போக்கை கண்டித்து மிக விரைவில் தமிழகம் தழுவிய அளவில் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இன்னொரு பிரிவும் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அந்த சூழலை உலகிற்கு மிக விரைவில் தெரியவரும் ஒரு சதவிகிதம் கூட இல்லாத அவர்கள் ஆட்சியாளரை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதனை தெரிந்து திராவிட மாடதாக திகழ்ந்துவரும் தமிழக அரசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.
சமூகநீதி பேசும் இவர்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முற்றுகையாக தான் இருப்பார்கள் என்றும் நடைபெற்ற கருத்தரங்கில் குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் எஸ்சி எஸ்டி பிரிவு மத்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி செய்தியாளிடம் கூறுகையில், இந்த பிரச்சனை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டது என்றாலும் கூட பொதுமக்களிடம் அதனை எடுத்துரைத்து தங்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் உறுதிபட தெரிவித்தார் சரசுரம் ரவி.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும் நிர்வாகிகளும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: