சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஓமலூர் அருகே உள்ள 200 அருந்ததிய குடும்பங்கள் வாழும் பகுதிக்கு மயான வழி பாதை அமைத்து தர கோரி ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
சேலம் மாவட்ட ஓமலூர் வட்டம் சமுத்திரம் பணிக்கனூர் பகுதியில் சுமார் அருந்ததியர்கள் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மயானத்தில் சடலங்களை எடுத்து செல்லும் பாதை மிகவும் மோசமாகவும் உள்ளது சடலத்தை எடுத்து செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் மயானத்திற்கு பொதுமக்களால் செல்லமுடியவில்லை இந்த அவல நிலையை போக்க 50 ஆண்டுகளாகவே பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தொடர்ந்து மழை பெய்து வருவதால் மயானத்துக்கு செல்ல புதிய பாதையை அமைத்து தர வேண்டி கிராம பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு பஞ்சாயத்து ராஜ் இடமும் கேட்டுள்ளோம்.
நீண்ட கால கோரிக்கையாக மயான பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தி பல்வேறு மனுக்களையும் கொடுத்தோம்
தற்போது மழை பெய்து வருகிறது உடனடியாக நடவடிக்கை எடுத்து வழிப்பாதை செய்தி தரவேண்டும். தற்போது அதற்கான பணிகளை செய்து தர வேண்டி சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்து வருகை புரிந்து சேலம் மாவட்ட ஆட்சியரை கூட்டு நடவடிக்கை குழு தலைவர் சரஸ்ராம் ரவி தலைமையில் கோரிக்கை மனுவை வழங்கப்பட்டது இதனை அடுத்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை கையில் எடுக்க உள்ளதாக கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சரஸ்ராம் ரவி தெரிவித்தார்.
0 coment rios: