ஞாயிறு, 3 நவம்பர், 2024

சேலம் அருகே தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் தா.வெ.க., நிர்வாகிகள் மற்றும் சிலர் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் பேட்டி

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் அருகே தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் தா.வெ.க., நிர்வாகிகள் மற்றும் சிலர் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் பேட்டி

சேலம் இரும்பாலை அருகே பூச நாயக்கன்பட்டியில் இரு தரப்பினர்கள் இடையே சமூக இளைஞர்கள் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடைபெற்றன மக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த இடத்தில் மது அருந்தியதை தட்டி கேட்ட தால் நடைபெற்ற இந்த தாக்குதலில் வீடுகளை சூறையாடி சதீஷ் குமார் ஜெயக்குமார் செல்வராஜ் வெங்கடாசலம் தமிழரசி உள்ளிட்டோர் மீது தாக்குதல் தாக்குதல் நடைபெற்றது இதில் காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளிடம் கூறும் போது பூச நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒரு தரப்பு மற்றொரு தரப்பினர் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது இதில் சம்பந்தப்பட்ட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் ஆனால் இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் வேறொரு சமூகத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் தமிழக முழுவதும் ஆதிக்க சமூகத்தை அடக்கும் நிலை நீடித்து வருகிறது குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் குறிப்பாக பட்டியலின மக்களின் சொத்துக்களை அழிப்பதற்காகவே இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர். போலீசார் இனிவரும் காலங்களில் பட்டியல் இன சமூகத்தில் வசிக்கக்கூடிய பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கின்ற தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் வேறொரு சமூகத்தை சேர்ந்த சிலர் உள்ளனர் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் பேட்டியின் போது ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் ஏ டி ஆர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: