புதன், 13 நவம்பர், 2024

மாநிலம் முழுவதும் 24 மணி நேரம் தனியார் மருத்துவர்கள் ஸ்டிரைக்: ஐ.எம்.ஏ., மாநில தலைவர் பேட்டி

சென்னை, கிண்டி மருத்துவமனையில் அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டார். 
இச்சம்பவத்தை கண்டித்து மாநில அளவில் டாக்டர்கள் போராட்டத்தை துவங்கி உள்ளனர். இந்நிலையில், இந்திய மருத்துவ சங்க மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. 
ஈரோட்டில் இருந்து மாநில தலைவர் டாக்டர் அபுல்ஹசன் பங்கேற்று பேசினார். பின்னர், நிருபர்களிடம் டாக்டர் அபுல்ஹசன் கூறுகையில், 

சென்னை கிண்டி மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம், டாக்டர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்தை கண்டித்தும், டாக்டர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தியவர் மீது தண்டனை சட்டம் 48/2008 ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும், டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு கோரி நேற்று மாலை, 6:00 மணி முதல் இன்று மாலை, 6:00 மணி வரை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். 

அதன்படி போராட்டம் நடந்து வருகிறது.
இப்போராட்டத்தில் மாநில அளவில், 7,900 தனியார் மருத்துவமனைகள், 28,000 கிளினிக்களில் பணியாற்றும், 45,000 டாக்டர்கள் பங்கேற்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவு வழங்கம் போல இயங்கும். புறநோயாளிகள் பிரிவு, அவசரம் அல்லாத, அறுவை சிகிச்சைகள் போன்றவை செய்யப்பட மாட்டாது என கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: