ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்ற ஜவுளி வியாபாரிகள் கால அவகாசம் கேட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட நகரின் முக்கிய சாலைகளில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று முதல் 15ம் தேதி வரை 4 நாட்களுக்கு, மாநகராட்சியின் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று ஈரோடு மாநகரின் ஜவுளிக்க என்ன பிரத்யேகமான வியாபார இடமாக விளங்கும் மணிக்கூண்டு முதல் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் வரையிலான பகுதியில், சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.
இதில், சாலையோரத்தில் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் மற்றும் மேற்கூரைகள் மற்றும் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் ஆகியவை அகற்றப்பட்டன.
மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஸ்வரன்சிங் தலைமையில், நெடுஞ்சாலை துறையினர் முன்னிலையில், மாநகராட்சி பணியாளர்கள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியையொட்டி, காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து, பன்னீர் செல்வம்பூங்கா பகுதியில் இருந்து, மீனாட்சி சுந்தரனார் சாலையில் அரசு மருத்துவமனை ரவுண்டானா வரையிலும், அங்கிருந்து, மேட்டூர் ரோட்டில், பேருந்து நிலையம் அருகில் சத்திரோடு ரவுண்டானா வரையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளன.
ஏற்கனவே பன்னீர்செல்வம் பார்க்க முதல் மணிக்கூண்டு பகுதி பஸ் நிலையம் ஸ்வஸ்திக் கார்னர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அகற்றப்பட்டன. ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
இந்த முறை பெயரளவுக்கு மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 coment rios: