S.K. சுரேஷ்பாபு.
உலகநாயகன் கமல்ஹாசனின் 70-வது பிறந்தநாள் விழா.. மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆர்வத்துடன் குருதிக்கொடை.
தமிழகத் திரை உலகில் உலக நாயகனும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான பத்மஸ்ரீ கமலஹாசனின் 70 வது பிறந்தநாள் விழா அந்த கட்சியினரால் இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கிக்கு தங்களது குருதிகளை தானமாக வழங்கினர்.
மக்கள் நீதி மையம் கட்சியின் சேலம் மண்டல தலைவர் கே காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் மாவட்ட அமைப்பாளர் இஸ்மாயில், நகர செயலாளர் அம்ஜத், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் சத்யா என்கின்ற சத்தியமூர்த்தி மற்றும் ஊடகத்துறை மாவட்ட செயலாளர் அனிதா உட்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு தங்களது குருதிகளை கொடையாக வழங்கினர்.
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா குறித்து மக்கள் நீதி மைய சேலம் மண்டல செயலாளர் கே காமராஜ் செய்தியாளரிடம் கூறுகையில், கமலஹாசன் அவர்களின் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் தங்களது மன்றம் மற்றும் கட்சியின் சார்பில் எழுச்சி உடன் கொண்டாடப்பட்டு வருவதாகவும், நடப்பாண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் குருதிக்கொடை வழங்குதல் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிப் பணிகளையும் தொடர்ந்து விரைவுப் படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
0 coment rios: