அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று மாலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் சுமார் 400 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 1,200 மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த விவரம் மருத்துவமனை முன்பு உள்ள போர்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் அதே சமயம் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல் செயல்பட்டது.
இதேபோல் ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இன்று 70க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புறநோயாளிகள் பிரிவில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேசன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.
ஆனால் அதே சமயம் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல் செயல்பட்டது. மருத்துவர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையின் நுழைவுவாயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்குள்ள வெளிப்புற சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என அனைத்து பகுதிகளிலும் சுற்றி வந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் இதேபோல் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டாலும் பயிற்சி மருத்துவர்கள், பிற மருத்துவர்கள் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல்,மாவட்டத்தில் உள்ள அனைத்தும் அரசு மருத்துவமனைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 coment rios: