இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, சிறப்பு சுருக்கத்திருத்தம் 2025ன் ஒரு பகுதியாக இன்று (நவ.16) மற்றும் நாளை (நவ.17), மேலும், 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்) 4 நாட்கள் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் 2,222 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.
மேற்படி சிறப்பு முகாமில் பொது மக்களிடமிருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.
இம்முகாமில் அனைத்து தகுதியான வாக்காளர்களும் உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற சேவைகளை பெறலாம்.
அதனைத் தொடர்ந்து, இன்று (நவ.16) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா மொடக்குறிச்சி வட்டம், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சாமிநாதபுரம்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடைபெற்றதை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சந்திரசேகர், துணை வட்டாட்சியர் (தேர்தல் பணி) லோகேஸ்வரன் உட்பட கிராம நிர்வாக அலுவலர்கள், தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 coment rios: