சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் ஆலோசனைக் கூட்டம் ..
சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் சௌடாம்பிகை விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, செந்தில்குமார் மாநில உழவர் பேர் இயக்க துணை செயலாளர் தலைமை தாங்கினார். இரா அருள் எம் எல் ஏ மாநகர் மாவட்ட செயலாளர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ. ஆலயமணி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் துவக்க உரையாக இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.
மேலும் இந்த கூட்டத்தில், கதிர்.ராசரத்தினம் மாநகர மாவட்ட தலைவர். பொருளாளர் கவிதா,மாவட்ட துணை செயலாளர்கள் தங்கராஜ், ராஜமாணிக்கம், கோவிந்தராஜ்,
மாவட்ட மகளிர் சங்க செயலாளர் கிருஷ்ணம்மாள்,
கலைவாணன்,
ஆட்டோ சுந்தர்ராஜன்
பகுதி ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சிவகுமார், திருசங்கு, ஏகே நடராஜ்,
மாவட்ட பொறுப்பாளர்கள் ரவிசங்கர்,வக்கீல் ரஞ்சித் குமார், ஆட்டோ சின்னத்தம்பி
ரமேஷ் விஜயகுமார், சுரேஷ்குமார், பூக்கடை சுந்தரம், கண்ணீஸ்வரன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 21 திருவண்ணாமலை நடைபெறும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாட்டில் சேலம் மாநகர் மாவட்டத்தின் சார்பில் சுமார் 10ஆயிரம் நபர்கள் கலந்து கொள்வது எனவும், அதுமட்டுமில்லாமல் மேட்டூர் காவிரி உபரிநீரை சேலம் மாவட்டம் முழுமைக்கும் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் என மருத்துவர் ஐயா அவர்களும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் எனவே அரசு சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்களிலும் மேட்டூர் காவிரி உபரி நீரை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
0 coment rios: