பெருந்துறை அருகே சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அனீஸ் என்கிற கார்த்திகேயன் (வயது 21). சில தினங்களுக்கு முன்பு கார்த்திகேயன், அதே பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இந்நிலையில் மீண்டும் அந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள கார்த்திகேயன் முயற்சி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தான் படிக்கும் பள்ளியின் ஆசிரியையிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாயாரை அழைத்து, நடந்த விபரங்களை ஆசிரியை கூறியுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
0 coment rios: