ஞாயிறு, 1 டிசம்பர், 2024

அரசியல் சாசனம் தந்த 18 % இட ஒதுக்கீட்டில் தலையிடக்கூடாது என் மனம் உள்ளிட்ட 10 அம்ச தீர்மானங்கள் தமிழ்நாடு தேசீய மக்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

அரசியல் சாசனம் தந்த 18 %  இட ஒதுக்கீட்டில் தலையிடக்கூடாது என் மனம் உள்ளிட்ட 10 அம்ச தீர்மானங்கள் தமிழ்நாடு தேசீய மக்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றம். 

தமிழ்நாடு தேசிய மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி தலைமை தாங்கினார். அம்பேத்கர் ஜனசக்தி கட்சியை சேர்ந்த விஸ்வநாத், கிருத்துவ மக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஜேசுபாதம் மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு அரசியல் பிரிவை சார்ந்த பழ. ஜெயமுரளி உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், உள் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும், அருந்ததியர்களுக்கு 4% இட ஒதுக்கீடு தனித்து கொடு. ( பொருளாதார பின்னடைவு பிரிவினருக்கு வழங்கியது போல் ) தமிழக அரசு வழங்க வேண்டும், அரசியல் சாசனம் தந்த 18 %  இட ஒதுக்கீட்டில் தலையிடக்கூடாது,
பட்டியலின மக்களை பிளவு படுத்தி அவர்களுக்குள்  சண்டையை உருவாக்க முயலும் போக்கை கைவிட வேண்டும், பட்டியலின பழங்குடி மக்கள்  ஒன்று திரள வேண்டும், உள் ஒதுக்கீட்டு மூலம் பட்டியலின தலைவர்களை பிரித்து அந்த மோதலில் அவர்களை கவனம் செலுத்த வைத்துவிட்டு இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ள இட ஒதுக்கீடை முழமையாக நீக்க முயலும்  சதி திட்டத்தை மத்திய மாநில அரசுகள்  கைவிட வேண்டும், 
இந்தியா முழவதும் அனைத்து மத்திய அரசு & பொதுதுறைகளில் ஒரு லட்சம் SC/ ST காலி பின்னடைவு ( Backlog ) பணி இடங்களை உடனடியாக மத்திய அரசு உடனடியாக  நிரப்பிட வேண்டும், அதேபோல் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிரப்ப படாத SC/ ST  காலி பின்னடைவு பணி இடங்கள் ( Backlog ) சுமார் 25 ஆயிரம்  இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், கடந்த 50 ஆண்டுகால வெள்ளை அறிக்கையை  தமிழக வெளியிட வேண்டும், வரும்  2026 சட்டசபை தேர்தலில் 44 தனி தொகுதிகளில்  பட்டியல் / பழங்குடியின/ கிருத்துவ/ முஸ்லீம் மற்றும்  பௌத்த மக்களை  ஒரு புள்ளியில் அணி  திரட்டுவது, தேர்தலில் வாக்கு விகிதாசரத்தின்படி சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறையை  அமுல்படுத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவது, சேலத்தில்  இந்திய அரசியல் சாசன சிற்பி டாக்டர். பீமாராவ் அம்பேத்கர் மற்றும்  பட்டியலின மக்களின் விடிவெள்ளி தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் ஆகியோருக்கு  100 அடி உயர  சிலைகள் அமைக்க அனுமதி கோருவது மற்றும் பட்டியல், பழங்குடி மக்கள் மற்றும் பிற்படுத்தபட்ட, ஒடுக்கபட்ட மக்களை சமூக  நீதி. ( ,Social Justice / Equality )  மூலம் ஒன்றிணைப்பு செய்வது என்பன உள்ளிட்ட 10 அம்ச தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 
இந்த கூட்டத்தில் அமைப்பின் நிர்வாகிகள், தமிழமுதன், வணங்காமுடி, பாலு, பாபு, பெர்ணான்டஸ் மற்றும் வெங்கட் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: