ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை வழங்கிய காசோலையை பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும் மாவட்ட தலைவர் டாக்டர் மக்கள் ஜி ராஜன் இன்று வழங்கினார்.
பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 40 ஆயிரமும், கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 25000, பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 25000, மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சுமார் ஒரு லட்சமும், பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 15,000 மற்றும் 10 ஆயிரம் மொத்தமாக 9,40,000 ரூபாய் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வழங்கப்பட்டு அதன் காசோலையை இன்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து விண்ணப்பித்த 28 மாணவ மாணவியர்களுக்கு மாவட்டத் தலைவர் மக்கள் ஜி ராஜன் வழங்கினார்.
இந்த காசோலையை வழங்கிய மாநில தலைவர் அவர்களுக்கு இன்று நடைபெற்ற கூட்டத்தில் நன்றி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் கூறுகையில், தமிழக அரசு பேரிடர் காலத்தில் தற்பொழுது ஏற்பாடு செய்திருக்கக்கூடிய பணிகள் மிகச் சிறப்பாகவும் பொது மக்களுக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தும் வகையில் இல்லாமல் இருந்தது பாராட்டுக்குரியது.
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களையும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் மற்றும் அமைச்சர் பெருமக்களையும், அரசுத்துறை அதிகாரிகளையும் சுகாதாரத் துறை அதிகாரிகளையும் குறிப்பாக தூய்மை பணியாளர்களையும் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பாராட்டுகின்றோம்.
இந்த கூட்டத்தில், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் குளம் எம் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எல் பி பாலசுப்ரமணியம், வட்டார தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்,
நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு மாணவ, மாணவிகளோடு சேர்ந்து பெற்றோர்களும் வருகை தந்து மாநில தலைவர் அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
0 coment rios: