சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தெலுங்கு மக்களை இழிவுபடுத்தி பேசிய நடிகை கஸ்தூரிக்கு, சமுதாயத்தில் யாரையும் இழிவுபடுத்தி பேசாமல் இருக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கும் தீர்ப்பு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தேசிய தெலுங்கு சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் நாக அரவிந்தன் சேலத்தில் வலியுறுத்தல்.
திரைப்பட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களை இழிவு படுத்தி பேசிய விவகாரம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை குறித்து சேலத்தில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் நாகா. அரவிந்தன் செய்தியாளரிடம் கூறுகையில், திரைப்பட நடிகை கஸ்தூரி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகை கஸ்தூரி அவர்கள் தெலுங்கு மக்களை மிகவும் இழிவுபடுத்தி பேசியுள்ளார். அந்த செய்தி தமிழகம் தெலுங்கானா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொந்தளித்து மக்கள் அனைவரும் கஸ்தூரி அவர்களுக்கு கன்னடத்தை தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் இந்த சம்பவத்திற்கு முதலில் தேசிய தலைவர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு கண்டனத்தை தெரிவித்தோம். அடுத்து ஒவ்வொன்றாக நடைபெற்ற நிகழ்வுகளை தொடர்ந்து தமிழகத்தினுடைய டிஜிபி அவர்கள் இரண்டு தனிப்படைகளை அமைத்து உடனடியாக நடிகை கஸ்தூரியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.அது மிக வரவேற்கத்தக்க விஷயம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நேற்றைய தினம் நடிகை கஸ்தூரி தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை நீதியரசர் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதியரசர் அவர்களும் இது மிகவும் கண்டனத்திற்கு உரிய பேச்சு என்று கூறியுள்ளார். மேலும் தெலுங்கு மக்கள் தமிழகத்தின் ஒரு அங்கமாக தான் உள்ளனர் என்றும் தெலுங்கு மக்களை இழிவு படுத்தி பேசியது தவறு என்று சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் நாளை தினம் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், இனி இதுபோன்று எந்தவிதமான சமுதாயத்தையும் புண்படுத்தும் விதமாக யார் பேசினாலும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும் மாண்புமிகு நீதி அரசர் தகுந்த நடவடிக்கை எடுத்து சரியான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம் அமைப்பின் தலைவர் டாக்டர் நாகா. அரவிந்தன் சேலத்தில் தெரிவித்துள்ளார்.
0 coment rios: