S.K. சுரேஷ்பாபு.
மழைநீரில் மூழ்கிய 150 ஏக்கர் கரும்பு நெல் பாக்கு... திருமணிமுத்தாறு மற்றும்
ராஜ வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்ததால் பயிர்கள் அடித்து செல்லப்பட்டது. அரசு கணக்கீடு செய்து ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை ...
சேலத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது குறிப்பாக ஏற்காடு மலைப்பகுதியில் அதிகளவில் மழை பொலிவு ஏற்பட்டது இதனை அடுத்து அங்கிருந்து மழை நீர் முழுமையாக வெளியேறி திருமணிமுத்தாறு ராஜவாய்க்கால் ஓடையில் சென்றது இந்த திருமணிமுத்தாறு ராஜ வாய்க்கால் ஓடை செல்லும்
கந்தம்பட்டி
புத்தூர் அக்ரஹரம் பகுதியில் கரை உடைப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியில் இருந்த விளைநிலங்களுக்குள் புகுந்தது குறிப்பாக அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்பு நெல், சோளம் பாக்கு உள்ளிட்ட 150 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்ததால் முழுமையாக அழியும் சூழல் உருவாகியுள்ளது.
மழைநீர் விவசாய நிலங்களுக்குள் ஆர்ப்பரித்து செல்லும் பொழுது பயிரிடப்பட்டிருந்த பாக்கு சோளம் பருத்தி உள்ளிட்ட செடிகளும் அடித்து செல்லப்பட்டது அரசு உடனடியாக
ராஜ வாய்க்காலை தூர்வார வேண்டும் திருமணிமுத்தாறு கரையை பலப்படுத்த வேண்டும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று திருமணிமுத்தாற்று பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் கொண்டலாம்பட்டி தங்கராஜ் உட்பட ஆற்றுப் பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
0 coment rios: