வெள்ளி, 6 டிசம்பர், 2024

சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா....1307 மாணவ மாணவிகளுக்குபட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

சேலம்.

சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா....1307 மாணவ மாணவிகளுக்குபட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணைத்தலைவர்கள் சொக்குவள்ளியப்பா, தியாகுவள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்பித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டு 10 பட்டதாரிகளுக்கு முனைவர் பட்டங்களையும், சிறந்த தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 49 மாணவ மாணவிகள் மற்றும் இளநிலை பட்டதாரிகள் 994, முதுநிலை பட்டதாரிகள் 303 பேர் உட்பட 1307 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைதொடர்ந்து சிறப்புவிருந்தினர்கள் பேசும்பொழுது, சிறப்பான கல்வி சேவையை அர்ப்பனித்த பேராசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து மேலும் சிறந்த உள் கட்டமைப்பு, மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால்தான் பல விருதுகளை பெற்றுள்ளது என்றனர். மேலும் சர்வதேச தரத்தில் செயல்பட்டுவரும் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் எங்கு சென்றாலும் தனிச்சிறப்போடு விளங்கி கல்லூரிக்கு நற்பெயரை பெற்றுத்தந்து வருகிறார்கள் என்றும் இத்தகைய கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் பெருமைபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் திரு.வள்ளியப்பா பேசும்பொழுது சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் நவீனத் தொழில்நுட்பங்களை அறிந்து அதற்குகேற்ப தங்களின் ஆற்றலை நாள்தோறும் வளர்த்து கொண்டு திறம்பட செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார். 
இந்த விழாவில் சோனா கல்விக்குழுமத்தின்  முதல்வர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: