சேலம்.
அண்ணல் அம்பேத்கரின் 68 வது நினைவு தினம். பீமா சங்கம் மற்றும் சேலம் கோட்ட ஓரியண்டல் இன்சூரன்ஸ் சார்பில் நினைவஞ்சலி.
இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகன், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்கான போராளி அவர்களின் 68-வது நினைவு நாளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்கான போராட்ட களத்தில் முன்னின்று செயலற்ற உறுதி ஏற்போம் என்பதை வலியுறுத்தி பீமா சங்கம் மற்றும் சேலம் கோட்ட ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில்,
சேலம் கோட்ட மேலாளர் சுந்தரம் அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பீமா சங்கத்தின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி உறுதி மொழியினை வாசித்தார்.
நிகழ்ச்சியில் ரத்தினவேல் தினேஷ் அருணாச்சலம் சங்கீதா இந்துமதி சசி மற்றும் புத்த ட்ரஸ்ட் அமைப்பைச் சார்ந்த போதி மாதவன் பொன்னம்பலம் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
0 coment rios: