சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக முன்னாள் ஆளுனர் தோசையா அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம். தேசிய தலைவர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பில் அஞ்சலி.
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுனரும், ஆந்திராவின் முன்னாள் மாநில முதலமைச்சருமான ரோசய்யா தனது 88 வயதில், கடந்த 2021ம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு ஆளுநராகப் பதவி வகித்தவர் ரோசய்யா. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை ஆந்திர முதலமைச்சராகவும், அதுமட்டுமல்லாமல் கடந்த 2014ஆம் ஆண்டு கர்நாடக பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்தார். தனது எளிமையால் அனைத்து தலைவர்களுடனும் நட்பு பாராட்டப்பட்ட கோனிஜெட்டி ரோசையா அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் சார்பில் அவருடைய நினைவு தினம் சேலம் டவுன் கன்னிகா பரமேஸ்வரி கோவில் பகுதியில் நடைபெற்றது. தேசிய தெலுங்கு சிறுபான்மையினர் பேரவையின் நிறுவனரும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவர் டாக்டர் நாகா.அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தோசையா அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
0 coment rios: