சனி, 14 டிசம்பர், 2024

சேலம் மாநகராட்சி ஆணையர் அளித்த உறுதியின் பேரில் மறியல் போராட்டம் வாபஸ். தவறும் பட்சத்தில் நாளை சேலம் மாநகராட்சி அலுவலகத்தை நாளைமீண்டும் மறியல் செய்து முற்றுகையிடுவோம். சேலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் எச்சரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மாநகராட்சி ஆணையர் அளித்த உறுதியின் பேரில் மறியல் போராட்டம் வாபஸ். தவறும் பட்சத்தில் நாளை சேலம் மாநகராட்சி அலுவலகத்தை நாளைமீண்டும் மறியல் செய்து முற்றுகையிடுவோம். சேலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் எச்சரிக்கை. 

60 கோட்டங்களை உள்ளடக்கியது வரலாற்று சிறப்புமிக்க சேலம் மாநகராட்சி. இந்த 60 கோட்டங்களில் வாழும் பொதுமக்கள் எளிமையாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சேலம் மாநகரை நான்கு மண்டலங்களாக பிரித்து நான்கு மண்டலங்களிலும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 
அந்த வகையில் சேலம் அம்மாபேட்டை மண்டல அலுவலகம், சேலம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம், சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம், இதேபோன்று சேலம் சூரமங்கலம் மண்டல அலுவலகம். இந்த மண்டல அலுவலகங்களால் சம்பந்தப்பட்ட மண்டல பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளை அருகாமையில் உள்ள மண்டல அலுவலகங்களுக்கு சென்று கோரிக்கை வாயிலாக தற்பொழுது வரை நிவர்த்தி செய்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் சேலம் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை தற்பொழுது இயங்கி வரும் இடத்தில் இருந்து மாற்றி வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், தற்பொழுது சூரமங்கலம் மண்டல அலுவலகம் செயல்பட்டு வரும் இடத்தினை மண்டபம் கட்டுவதற்கு  அனுமதி அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனை அறிந்த சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு ஏதுவாக தற்பொழுது சூரமங்கலம் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும் இதனை மாற்றி அமைத்தால் சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தை மறியல் போராட்டம் செய்து முற்றுகையிடுவேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். 
அதன் அடிப்படையில் இன்று சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் தலைமையிலான அவரது ஆதரவாளர்கள் சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிட கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக சேலம் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் சேலம் மாநகராட்சி அலுவலக பகுதியில் பாதுகாப்பு கருவி குவிக்கப்பட்டிருந்தனர். அப்பொழுது சேலம் மாநகராட்சிக்கு வந்த சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் அவர்களை மறியல் போராட்டம் செய்யாதவாறு சேலம் மாநகராட்சி ஆணையாளர் பேச்சுவார்த்தைக்கு தனது அறைக்கு அழைத்துள்ளார். பேச்சுவார்த்தையின் இறுதியில் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை மாற்றப் போவதில்லை என மாநகராட்சி ஆணையாளர்  உறுதி அளித்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து தற்காலிகமாக தனது போராட்டத்தை கைவிட்ட பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் மாநகராட்சி ஆணையாளர் உறுதி அளித்ததின் பேரில் தற்போது தற்காலிகமாக தங்களது போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் மீண்டும் சூரமங்கலம் மண்டல அலுவலகம் மாற்றியமைப்பதற்கு முயற்சி மேற்கொண்டால் நாளை மீண்டும் பெரிய அளவிலான மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடும் எச்சரிக்கையை பதிவு செய்துள்ளார் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள். 
இதனால் சேலம் மாநகராட்சி மைய அலுவலக பகுதி பெரும் பரபரப்பு உள்ளாகி காணப்பட்டது. 
சட்டமன்ற உறுப்பினரின் இந்த முற்றுகை மறியல் போராட்ட நிகழ்வுகளில் பாமக நிர்வாகிகள் கதிர் இராசரத்தினம், அண்ணாமலை மற்றும் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: