சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு சட்டமன்ற உறுப்பினருமான இ வி கே எஸ் இளங்கோவன் மறைவுக்கு, தேசியத் தெலுங்கர் சிறுபான்மையினர் பேரவையின் நிறுவனர் டாக்டர் நாக அரவிந்தன் இரங்கல்.
பகுத்தறிவு பகலவன் என்று போற்றப்படும் தந்தை பெரியாரின் பேரன் இ வி கே எஸ் இளங்கோவன். இவர் தனது இளைய பருவத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கண்டு அதற்காக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்று வந்த இவர், எதிர்காலத்தில் கட்சியில் உள்ள அவருக்கு ஈடுபாடு, மாவட்ட மக்களை அரவணைத்து சென்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் அடிப்படையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருந்தாலும் பழக்கட்ட பொறுப்புகளில் வகித்து வந்ததோடு மத்திய இணை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் மூத்த தலைவர் என்ற போற்றுதலோடு தனது மகன் இறப்பிற்கு பிறகு ஈரோடு சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார்.
கணக்கு சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவர் உடல்நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
அவருக்கு கூட்டணி கட்சிகளான திமுக ஊழிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் தங்களது இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து வரும் நிலையில் சேலத்தில் திமுக கூட்டணி மீது மிகுந்த பற்று கொண்ட சேலத்தைச் சேர்ந்த தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் பேரவை நிறுவனரும், ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவருமான டாக்டர் நாக அரவிந்தன் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் இ பி கே எஸ் இளங்கோன் அவர்கள் மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கல்களையும் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
0 coment rios: