வியாழன், 26 டிசம்பர், 2024

சேலம் பழைய சூரமங்கலம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியை சட்டத்திற்கு புறம்பாக விற்ற விவகாரம். பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி தமிழக அரசே அந்த பள்ளியை ஏற்று நடத்த வேண்டும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் பழைய சூரமங்கலம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியை  சட்டத்திற்கு புறம்பாக விற்ற விவகாரம். பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி தமிழக அரசே அந்த பள்ளியை ஏற்று நடத்த வேண்டும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம். 

சேலம் பழைய சூரமங்கலத்தில் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு நிதி உதவி பெறும் பள்ளியாகவும், ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுயநிதி மேல்நிலைப் பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வரும் இந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ரியல் எஸ்டேட் செய்யும் நிறுவனத்திற்கு பள்ளி நிர்வாகம் கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் விலைக்கு விற்றதாக கூறப்படுகிறது. தற்பொழுது அந்த விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் ரியல் எஸ்டேட் செய்யும் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது அதே ரியல் எஸ்டேட் நிறுவனம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியையும் விலைக்கு வாங்கி சட்டத்திற்கு புறம்பாக முன்னறிவிப்பு செய்யாமல் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை வெளியேற்றிவிட்டு பள்ளியை இடித்துவிட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் முயற்சியில் பள்ளி நிர்வாகமும் ரியல் எஸ்டேட் நிறுவனமும் முயன்று வருகிறது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு கட்டணம் தெரிகிறது பள்ளி நிர்வாகம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு எதிராகவும் கடந்து சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இந்த நிலையில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உடன் இன்று மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் புதுகோடு பேருந்து நிறுத்தம் அருகே இருந்து துவங்கிய பேரணிக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமை வகித்தார். அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பிரதாபன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ஏ டி ஆர் சந்திரன், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாநில தலைவர் பூமொழி, குரு கான்ஷீராம் அறக்கட்டளை நிறுவனர் விநாயகமூர்த்தி, மக்கள் தேசம் கட்சி மாநில செயலாளர் சுலைமான், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் மாரியப்பன், தமிழ் மாநில காங்கிரஸ் மேற்கு மாவட்ட செயலாளர் சுசீந்திரகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த பேரணியானது அந்தப் பகுதியின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியாக பள்ளியில் நிறைவடைந்தது. 
இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் 1800 மாணவர்களை பள்ளியை விட்டு துரத்தக்கூடாது, பள்ளியை தொடர்ந்து அங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பள்ளியை விற்றவர்கள் மற்றும் வாங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளையும் கோஷங்களையும் எழுப்பியவாறு ஊர்வலத்தின் போது கலந்து கொண்டனர். 
தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் பெயரில் சேவை மனப்பான்மையுடன் துவங்கிய பள்ளியை பணத்தாசையோடு பள்ளியை விற்பனை செய்து மாணவர்களை வாழ வைத்து வஞ்சித்து வேதனைப்படுத்தி மாணவர்களை பள்ளியை விட்டு துரத்தி பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் மாணவர்கள் நலன் கருதி அந்த பள்ளி தொடர்ந்து அங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்குமாறும், அந்தப் பள்ளியை சட்டத்திற்கு புறம்பாக சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் கல்வித்துறைக்கும் தகவல் தெரிவிக்காமல் விற்பனை செய்த பள்ளி நிர்வாகத்தின் மீதும், சட்டத்திற்கு புறம்பாக விலைக்கு வாங்கிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சட்டத்திற்கு விரோதமாக பள்ளியை பத்திர பதிவு செய்ததை ரத்து செய்யக் கோரியும், அந்தப் பள்ளியை தமிழக அரசு ஏற்று நடத்துமாறும் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சார்பிலும் ஊர் பொதுமக்கள் சார்பிலும் ஆர்ப்பாட்டத்தை இணைந்து நடத்திய அமைப்புகளின் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: