இதனைடுத்து, அவரது உடல் மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், பி.கே. சேகர்பாபு, கோவி.செழியன், மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
0 coment rios: