சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் 12வது போட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உரிமை பொங்கல் விழா. தை திருவிழாவை ஒட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு பொருட்களை வழங்கிய விசிகவினர்.
எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வரும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி உள்ளது, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் சூரிய பொங்கல், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கலை தொடர்ந்து காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் 12வது கோட்டத்திற்கு உட்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு மாவட்ட விசிக மகளிர் அணி சார்பில் சேலம் ஜான்சன் பேட்டை பகுதியில் உரிமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பன்னிரண்டாவது கோட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் கேசவன் என்கின்ற சிறுத்தை அப்பு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவினை சேலம் வடக்கு மாவட்ட விசிக மகளிர் அணி செயலாளர் வினிதா சுரேஷ் மற்றும் விசிக தொழிற்சங்க பிரிவு செயலாளர் கோபி வளவன் உள்ளிட்டவர் கலந்து கொண்டு விழா வினை துவக்கி வைத்தனர். புது பானையில் பொங்கல் இட்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து புது பானையில் பொங்கல் பொங்கி வரும் போது வரவேற்கும் விதமாக பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்து கோஷம் முழங்க இயற்கைக்கு நன்றி செலுத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்த உரிமை பொங்கல் விழாவில் கட்சி நிர்வாகிகள் சற்குணம் ஸ்ரீதர் ஸ்ரீனி சிவா ஜீவா கௌதம் சபரி சக்தி சீனிவாசன் சிவபாலன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 coment rios: