சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் மாநில அளவிலான ஆண்கள் கால்பந்து போட்டி. தைப்பொங்கல் விழாவை ஒட்டி நடைபெற்று வரும் இந்த போட்டியில் 36 அணிகள் பங்கேற்பு.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை ஒட்டி ஆண்டு தோறும் சேலம் ஜான்சன் நண்பர்கள் கால்பந்து குழு மற்றும் சேலம் புனித பால் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து நடத்தும் மாநில அளவிலான கால்பந்து போட்டி 22 ஆம் ஆண்டாக, கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள புனித பால் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் துவங்கிய இந்த மாநில அளவிலான போட்டியினை புனித பால் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் அருட்தந்தை அலெக்ஸ் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் ஜான்சன் நண்பர்கள் கால்பந்து குழுவின் நிர்வாகிகள் எபிராஜ் குமார் கிருஷ்ணமூர்த்தி சக்திவேல் பிரசாத் மற்றும் உதவி ஆய்வாளர் சையது முபாரக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நாக் அவுட் முறையில் நடைபெற்று வரும் இந்த மாநில அளவிலான போட்டியில் சேலம் ஜான்சன் நண்பர்கள் கால்பந்து அணி, தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு மற்றும் நாமக்கல் உட்பட 36 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளனர். கால் இறுதி அரையிறுதி போட்டிகள் நடத்தப்பட்டு நாளை மாலை இறுதி போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ள அணிகள் வெற்றி பெறும் முனைப்போடு தங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தி விளையாடி வருகின்றனர். ஜான்சன் நண்பர்கள் கால்பந்து குழுவின் சார்பில் 22 ஆம் ஆண்டாக நடைபெற்று வரும் இந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு பரிசு கோப்பைகளும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட உள்ளன என்று புனித பால் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் அருட்தந்தை அலெக்ஸ் தெரிவித்தார்.
0 coment rios: