இந்த ஆய்வின் போது, அண்ணா நகரில் உள்ள ஒரு பெட்டிக்கடை மற்றும் ஈரோடு ரோடு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து ஒவ்வொரு கிடைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் 2 கடைகளுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனையடுத்து, கடைகளின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடைகள் தொடர்ந்து இயங்காத வகையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பாலித்தீன் பைகள் பயன்படுத்திய மேலும் 5 கடைகளுக்கு ரூ.3,750 அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கூறுகையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தாலோ அல்லது உணவு பொருளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தாலோ பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணை தொடர்பு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
0 coment rios: