சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
இந்திய தேசிய தியாகிகள் நினைவு தினம். பல்வேறு அமைப்புகள் சார்பில் சேலத்தில் தியாகிகள் ஸ்தூபிக் மலர் தூவி மரியாதை.
இந்திய தேசிய சுதந்திரத்திற்காக பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு தங்களது இன்னுயிர் நீத்த தலைவர்களை போற்றும் விதமாக ஜனவரி 30 ஆம் தேதி ஆண்டுதோறும் தியாகங்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாலை அணிவித்தும் மலர் அஞ்சலி செலுத்தியும் மரியாதை செய்யப்பட்டது.
குறிப்பாக மக்கள் சட்ட உரிமைகள் கழகம், மக்கள் சேவை இயக்கம் மற்றும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை சார்பில் தியாகிகள் ஸ்தூபிக்கு மாலை அணிவித்தும் மலர்களை தூவியும் மரியாதை செய்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் தலைவர் பாபு மற்றும், ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த மலர் அஞ்சலை நிகழ்ச்சியில் அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு இந்திய சுதந்திர போராட்டத்திற்காக தங்களது இன்னுயரையும் நீத்த தலைவர்களுக்கு வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். இதே போல காந்தி காமராஜர் நற்பணி நற்பணி மன்றத்தின் சார்பில் தியாகிகள் தினத்தை கடைபிடிக்கும் விதமாக அமைப்பின் நிர்வாகிகள் கோவை சுந்தரம் அபுதாஹிர் வழக்கறிஞர் சுரேந்தர் பாண்டியன் புஷ்பா பாண்டியன் வசந்தம் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அகழ் தீபங்களை ஏற்றியும் மாலை அணிவித்தும் மலரஞ்சலி செலுத்தியும் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை செலுத்தினர். இதே போல தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று மாலை அணிவித்தும் மலர் தூவியும் அவர்களை நினைவு கூறும் வகையில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
0 coment rios: