சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
போக்குவரத்து வார விழா. சேலம் மாநகர காவல் துறை தெற்கு வட்டார போக்குவரத்து பிரிவு வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து துண்டு பிரசவம் விநியோகம்.
வாகன விபத்துகளால் ஏற்படும் உயிர்பலிகள் மற்றும் விபரீதங்களை தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் போக்குவரத்து வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர காவல் துறை சார்பில் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் இடையே ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சேலம் தெற்கு போக்குவரத்து பிரிவு காவல்துறை சார்பில் சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் அசைவுகரியங்கள் குறித்தும் வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி சேலம் தெற்கு போக்குவரத்து பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு மற்றும் பாலு ஆகியவரது முன்னிலையில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
அப்பொழுது போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு ஒவ்வொரு வாகன ஓட்டிகளிடமும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாகனங்களில் தலைக்கவசம் வைத்துள்ளீர்கள் அதனை ஏன் அணிய மறுக்கிறீர்கள் அணிந்தால் தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் உதவியாக இருக்கும் தவறும் பட்சத்தில் தங்களது குடும்பம் எதிர்கால சூழல் கேள்விக்குறியாக மாறும் ஆகவே தயவு செய்து தலைக்கவசம் அணிந்து பயணிகள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இது அப்போது ரயிலுக்காக போடப்பட்டிருந்த ரயில்வே கேட்டின் முன் காத்திருந்த இறுதி சக்கர வாகன ஓட்டிகள் இடையே ஆச்சரியத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
0 coment rios: