புதன், 29 ஜனவரி, 2025

திராவிட மாடல் ஆட்சி மக்களின் உள்ளத்தை வெல்லக் கூடியதாக உள்ளது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி

பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரை சாடியவர்கள் இருந்தார்கள், அதை எதிர்கொண்டார், அதை மீறிதான் பெரியார் இருந்தார், பிரபாகரன் யார் என்று தெரியாது எங்களுக்கு, இந்திய அரசியல் மட்டும் தான் தெரியும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் பேட்டி.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், மாவட்டத் தலைவர் ஆரிப் தலைமையில், செயல்வீரர்கள் கூட்டம் ஈரோடு திருநகர் காலனியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், திமுக மாநில துணைச் செயலாளர் அந்தியூர் பா.செல்வராஜ்  ஐ.யூ. எம்.எல் பொருளாளர் கலில், டாக்டர் அப்துல்லா, கே கே.எஸ்.கே ரபிக், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநிலத் தலைவர் கே.எம் காதர் மொகிதீன், ஈரோடு கிழக்கு தொகுதி சிறுபான்மையினர் மக்களின் 40ஆயிரம் வாக்குகள் உள்ளது. இதனால் அனைத்து பள்ளி வாசல் அமைப்பு சார்பில் கூட்டமைப்பு உள்ளது. இந்த கூட்டமைப்பு கூட்டத்தில் வேட்பாளராக விசி சந்திரகுமார் ஆதரவு தெரிவிக்கப்பட்டது, பொதுக்கூட்டம் மூலம் பிரச்சாரம் செய்ய தேவையில்லை.

ஈரோடு மண் பெரியார் இணைந்து பேசப்படுகிற ஒன்று ஈரோட்டில் பெரியார் காலத்தில் பொறுத்தவரை இஸ்லாமிய மக்கள் ஒரு தாய் மக்களாக வாழ்ந்தார்கள். அந்த அடிப்படையில் பெரியார் மதிக்க கூடியவர்கள் தொடர்ந்து அண்ணா வழி மற்றும் கருணாநிதி அரசியல் பாதை வகுத்த பாதையில் செல்கிறோம்.

திராவிட மாடல் ஆட்சி பொற்கால ஆட்சி இந்தியா முழுவதும் திராவிட மாடல் ஆட்சி மக்களின் உள்ளத்தை வெல்லக் கூடியதாக உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து கொள்கை ரீதியாக திமுகவுடன் உள்ளது பயணிக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியில் இன்று சொல்லும் சோலகம் எல்லாம் 1400ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மதத்தில் சொல்லப்பட்டுள்ளது இதனால் தான் திமுகவுடன் கூட்டணி தர்மத்தை தாண்டி கொள்கை கூட்டணிக்காக உள்ளோம்.

ஜமாத் நிர்வாகிகள் நம்ம சமுதாயத்தின் சார்பில் உள்ள 85%வாக்கு குறையாமல் திமுகவுக்கு வழங்க வேண்டும். அதற்கு உதயசூரியன் சின்னத்திற்காக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜமாத் அமைப்புகள் கூட்டம் நடத்தப்பட்டது.

பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரை சாடியவர்கள் இருந்தார்கள் அதை எதிர்கொண்டார். அதை மீறி தான் பெரியார் இருந்தார்
பிரபாகரன் யார் என்று தெரியாது எங்களுக்கு இந்திய அரசியல் மட்டும் தான் தெரியும்.

இந்திய சாதனத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்கிறோம் தமிழகத்தை பொறுத்தவரை பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை குடும்ப அரசியலாக பார்க்கவில்லை கொள்கை அரசாக தான் நினைக்கிறேன்.

வக்பு வாரியத்தின் சட்ட மசோதா கூட்டு நடவடிக்கை குழுவில் 16பேர் பாஜக சாந்த வர்கள் மீதம் 10பேர் வெளியே அனுப்ப பட்டார்கள் 46திருத்தம் முன் வைக்கப்பட்டது. அதில் ஆ ராசா வைத்த ஒரு திருத்தம் கூட ஏற்கவில்லை.

வக்பு வாரியம் சட்டம் 1400 ஆண்டு காலமாக உள்ளது. ஆனால் அதன் மீது கருத்து சொல்ல ஒரு முஸ்லிம் 5ஆண்டுகள் முஸ்லிமாக இருந்தால் கருத்து சொல்ல முடியும் என்று சட்டம் சொல்லுகிறது. புறம்போக்கு நிலத்தில் எத்தனையோ தர்கா, மசூதி பல வருடங்களாக உள்ளது. இது எப்போது வந்தது என்று கணக்கு உள்ளதா?

இந்தியாவில் ராணுவ ரயில் துறைக்கு அடுத்தப்படியாக வக்பு வாரியத்துக்கு சொத்துக்கள் உள்ளன அதை கபலிகரம் செய்யவும் அரசாங்க சொத்துக்களாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறது உச்சநீதிமன்றத்தை நாடு உள்ளோம்.

பொது சிவில் சட்டம் குறானில் உள்ள சட்டத்தை மாற்றும் வகையில் பொது சிவில் சட்டம் உள்ளது குறானை  மாற்ற மத்திய அரசு யார்?. இந்தியாவில் உள்ள ஆண் பெண் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்க என்றும் ஜாதி ஒழிப்பு செய்ய வேண்டும் என பலவற்றை உச்சநீதிமன்றம் சொல்லி உள்ளது.

இதையெல்லாம் மத்திய அரசு செய்துள்ளதா?. இதனால் பொது சிவில் சட்டம் மாற்றுவேன் என்பது  முயற்சி செய்வது மத்திய அரசு அயோக்கியத்தனம். ஒரு மாநிலத்தில் மட்டும் பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் மற்ற மாநிலங்கள் ஏமாந்து போய் விடுவார்கள் இதனால் சிறுபான்மையினர் மக்கள் வேடிக்கை பார்த்து வாடிக்கையாகி விட்டது என பேட்டியளித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: