ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 4 சக்கர வாகனங்கள் 11ம், 2 சக்கர வாகனங்கள் 94ம் என மொத்தம் 105 வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் வருகிற 21ம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் நடக்கிறது. ஏலம் எடுப்பவர்கள் வருகிற 19 மற்றும் 20ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாகனங்களை நேரில் பார்வையிட லாம்.
ஏலம் எடுக்க வருபவர்கள் முன்பணமாக இருசக்கர வாகனத்துக்கு ரூ.2 ஆயிரமும், 4 சக்கர வாகனத்துக்கு ரூ.5 ஆயிரமும் வருகிற 21ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை பொது ஏலம் நடக்கும் இடத்தில் செலுத்த வேண்டும். வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையும், சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 9498174836, 9442900373, 9976057118 ஆகிய கைப்பேசி எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
0 coment rios: