ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. வழக்கமாக அ.தி.மு.க. பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்படும் பேனரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்கள். இடம்பெறும். மேலும் இந்த பேனரில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் பெரிதாகவும், அதற்கடுத்து உள்ளூர் தலைவர்களின் படங்கள் சிறியதாகவும் இருக்கும்.
இந்த நிலையில், அத்தாணி அ.தி.மு.க. பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்பட்ட பேனரில் வலது புறத்தில் ஜெயலலிதாவின் முழு உருவப்படமும், சிறியதாக இரட்டை இலை சின்னமும், இடது புறத்தில் எம்.ஜி.ஆரின் முழு உருவப்படமும், சிறியதாக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் உருவப்படமும், நடுவில் எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக செங்கோட்டையனின் புகைப்படமும் இருக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
0 coment rios: